இரவில் பால் குடிப்பது பலரும் கடைபிடிக்கும் வழக்கமான ஒன்றாகும். வெறும் பால் குடிக்காமல், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். இதில் இரவு தூங்கும் முன்பாக மஞ்சள் தூள் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
பாலில் மஞ்சள் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே இரவு நேரத்தில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது
வீக்கத்தைக் குறைக்க
மஞ்சள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
மஞ்சள் பால் குடிப்பது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்பட உதவும் ஆற்றலைப் பெறலாம்
மூட்டு வலி குணமாக
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த மஞ்சள் பாலைக் குடிப்பது கீல்வாதம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், அசௌகரியத்தை நீக்க உதவுகிறது
சிறந்த தூக்கத்திற்கு
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது
இரவில் மஞ்சள் பால் குடிப்பதன் மூலம் இது போன்ற பல்வேறு நன்மைகளைப் பெறலாம். எனினும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இரவில் மஞ்சள் பால் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது