ஆம்லா ஷாட்
உடல் பருமன், நீரிழிவு நோய், சரும ஆரோக்கியம் என பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஆம்லா ஷாட் சிறந்த தீர்வாக அமைகிறது. வெறும் வயிற்றில் ஆம்லா ஷாட்களை குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்
கொழுப்பை எரிப்பதற்கு
ஆம்லா ஷாட் அருந்துவது உடலில் கொழுப்பு எரிப்பைத் தூண்டுவதன் மூலம் கொழுப்பைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தலாம்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆம்லா ஷாட் ஒரு பயனுள்ள தேர்வாகும். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
வாயு, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள், அன்றாட உணவில் ஒரு அங்கமாக ஆம்லா ஷாட் அருந்தலாம். இதை வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் நல்ல செரிமானத்தை மேம்படுத்தலாம்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
ஆம்லாவில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது தெளிவான சருமம் மற்றும் துடிப்பான நிறத்திற்கு வழிவகுக்கிறது
ஆம்லா ஷாட்களை எப்படி செய்வது
ஆம்லா ஷாட் தயார் செய்ய 1-2 நெல்லிக்காயை எடுத்து, நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி, பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இதில் சுவைக்கு தேன் அல்லது உப்பு சேர்த்து அருந்தலாம்