இனி மாம்பழ ப்ரூட்டியை காசு கொடுத்து கடையில வாங்காதீங்க... வீட்டிலேயே ஈசியா செய்யலாம்!

By Devaki Jeganathan
10 May 2025, 21:07 IST

நீங்க உங்க குழந்தைகள் கேட்கும் போது எல்லாம் மாம்பழ ப்ரூட்டியை காசு கொடுத்து கடையில வாங்கி கொடுப்பீர்களா? இனி அப்படி செய்யாதீங்க. எளிமையான முறையில் வீட்டிலேயே ஈசியா மாம்பழ ப்ரூட்டி செய்யலாம். இதோ ரெசிபி.

தேவையான பொருட்கள்

மாம்பழ ப்ரூட்டி செய்ய, அல்போன்சா மாம்பழம் - 1 பெரிய கிண்ணம் (3 மாம்பழம்), மாங்காய் - 1 கப், சர்க்கரை - 1 கப் (250 மி.லி), தண்ணீர் - 1 லிட்டர்.

மாம்பழ ப்ரூட்டி செய்முறை

மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

செய்முறை படி - 2

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும். பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும்.

செய்முறை படி - 3

பிறகு வேகவைத்த மாம்பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலந்துவிடவும்.

செய்முறை படி - 4

பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டினால், அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார்! இதை ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம் அல்லது அரைமணிநேரம் குளிர்சாதனபெட்டியில் வைத்து பரிமாறலாம்.

மாம்பழ ப்ரூட்டி நன்மைகள்

மாம்பழ ஃப்ரூட்டி நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மாலைக்கண் நோயைத் தடுக்கவும் உதவும். இருப்பினும், இதில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம் மற்றும் பாதுகாப்புகள் மற்றும் பிற சேர்க்கைகள் இருக்கலாம்.