நல்ல செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சீரான மற்றும் சரியான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, இரவு நேரத்தில் பலரும் செரிமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் இரவு உணவுக்குப் பிறகு நல்ல செரிமானம், குடல் ஆரோக்கியத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்
லேசான இரவு உணவு
இரவில் கனமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பதிலாக, எளிதாக செரிமானம் அடையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் மெலிந்த புரத விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
குறுகிய நடைப்பயிற்சி
இரவு சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் குறுகிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இது செரிமான அமைப்பை எளிதாக்குகிறது. மேலும், வீக்கம் மற்றும் அசௌகரியத்திலிருந்து விடுவிக்கிறது
உடனடியாகப் படுப்பதைத் தவிர்ப்பது
சாப்பிட்ட உடனேயே சில படுப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ஆனால், இது அஜீரணம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க சாப்பிட்டவுடன் உடனடியாகப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேர முன்னதாக உணவு உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
மென்மையான நீட்சிப்பயிற்சி
சாப்பிட்ட பிறகு செரிமானம் அடைய உதவும் குழந்தை போஸ் போன்ற எளிய யோகாசனங்களை முயற்சிக்கலாம். இது செரிமான பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சமன் செய்ய உதவுகிறது. இது நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது
வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை டீ
இரவு உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நன்மை பயக்கும். மேலும், இஞ்சி, பெருஞ்சீரகம் அல்லது மிளகுக்கீரை போன்ற வெதுவெதுப்பான மூலிகை தேநீர் அருந்துவது செரிமானத்தை எளிதாக்குவதுடன், அசிடிட்டி ஏற்படுவதைத் தடுக்கிறது