தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுபவர்களா நீங்க? அப்ப இத பாருங்க

By Gowthami Subramani
04 Mar 2024, 19:41 IST

தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளைத் தந்தாலும் சர்க்கரை கலந்த தயிர் பல்வேறு விளைவுகளைத் தரலாம்

உடல் எடை அதிகரிப்பு

தயிர் மற்றும் சர்க்கரை கலந்த கலவை கலோரிகள் நிறைந்ததாகும். தொடர்ந்து அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை வழிவகுக்கும்

பற்களில் பிரச்சனை

தயிரில் கால்சியம், புரதம், வைட்டமின் டி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும் இதை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவது பற்களின் சிதைவுக்கு வழிவகுக்கலாம். இது பல் பற்சிப்பியை அரித்து, துவாரங்களை ஏற்படுத்தலாம்

வயிற்றுப்போக்கு பிரச்சனை

தயிருடன் சர்க்கரையை அதிகம் கலந்து சாப்பிடுவது குடல் நுண்ணுயிரியியல் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இது செரிமான செயல்முறையை சீர்குலைத்து வயிற்றுப்போக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்

நீரிழிவு நோய்

சர்க்கரையை தினந்தோறும் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. தயிரில் அதிகளவு சர்க்கரையை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது நீரிழிவு நோயை ஏற்படுத்தும்