அடிக்கிற வெயிலுக்கு தயிரை உங்க உணவில் இப்படி சேர்த்துக்கோங்க

By Gowthami Subramani
27 Mar 2025, 19:34 IST

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியமாகும். இதற்கு தயிர் சிறந்த தேர்வாகும். வெப்பத்தைத் தணிக்க தயிரை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இதில் கோடையின் போது தயிர் சாப்பிடுவதற்கான வழிகளைக் காணலாம்

லஸ்ஸி

கோடைக்காலத்தில் தயார் செய்யப்படும் குளிர்ச்சியான பானமாக லஸ்ஸி அமைகிறது. இது தயிர், தண்ணீர், சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து தயாரிக்கப்படும் பானமாகும். இதை அருந்துவது கோடைக்காலத்தில் ஏற்படும் தாகத்தைத் தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது

ரைத்தா

இது விரைவாக மற்றும் எளிதில் தயார் செய்யக்கூடிய ஒரு சிறந்த துணை உணவாகும். இந்த சுவைமிக்க உணவானது தயிர், நறுக்கிய காய்கறிகள் மற்றும் சில மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இது எந்த உணவுடனும் சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாகும்

தயிர் மற்றும் பழ ஸ்மூத்தி

இனிப்பான சுவையில் பிடித்த பழங்களுடன் தயிரையும் சேர்த்து பிளெண்டரில் அரைத்து மென்மையான மற்றும் ஆரோக்கியமான பானத்தைத் தயார் செய்யலாம். இது உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் விரைவான மற்றும் சுவையான காலை உணவாக அமைகிறது

மசாலா மோர்

இந்த பானம் தயிர், தண்ணீர், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் சுவையான பானமாகும். இதை கோடையில் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், நீரிழப்பிலிருந்து பாதுகாக்கவும், குடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது

தயிர் சாதம்

தயிர், மசாலா பொருள்கள் மற்றும் சமைத்த அரிசி கொண்டு தயிர் சாதம் தயார் செய்யப்படுகிறது. இது லேசானது மற்றும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் மதிய உணவுக்கு ஏற்றதாக அமைகிறது