பூசணிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது தெரியும். ஆனால், இந்த தாவரத்தின் இலைகளும் ஆரோக்கிய நன்மைகளால் நிறைந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பூசணி இலைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் பூசணி இலை தரும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
பூசணி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க
இந்த இலைகள் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக அமைகிறது
குடல் ஆரோக்கியத்திற்கு
பூசணி இலைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இந்த இலைகளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது
எலும்புகளை வலுவாக்க
பூசணி இலைகளில் கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை இரண்டுமே எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
கண்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இந்த வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் பூசணி இலைகளில் உள்ளது. இது கண்பார்வையைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமான பார்வையைப் பராமரிக்கவும் உதவுகிறது
எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
ஆரோக்கியமான சுவைக்காக பூசணி இலைகளை ஸ்டிர்-ஃப்ரைஸில் சேர்க்கலாம். இது தவிர, ஸ்மூத்திகள் அல்லது சூப்கள் போன்றவற்றில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்