வாழைப்பூ இருக்கா.? சட்டுன்னு ருசியா ஒரு சட்னி பண்ணலாம்.!

By Ishvarya Gurumurthy G
22 Feb 2024, 09:23 IST

வீட்டில் வாழைப்பூ இருக்கிறதா? எப்பவும் ஒரே மாதிரி செய்து சாப்பிடுகிறீர்களா? இதில் நாங்கள் சொல்வது போல் சட்னி செய்து சாப்பிடுங்கள். சும்மா அப்படி இருக்கும்.

தேவையான பொருட்கள்

2 கப் வாழைப்பூ, 1 பெரிய வெங்காயம், நெல்லிக்காய் அளவு புளி, தேவைக்கேற்ப தயிர், 1 ஸ்பூன் கடுகு, 4 டீஸ்பூன் உளுந்து, 5 சிகப்பு மிளகாய், 1 சிட்டிகை பெருங்காயம், தேவையான அளவு சமையல் எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர்

வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கி, குட்டி குட்டியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் இதனை தயிரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைப்பூவை சேர்த்து நன்றாக வதக்கவும். நிறம் மாறிய பின் இதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் புளி மற்றும் காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் பெருங்காயம், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து, எல்லாவற்றையும் ஆற விடவும்.

அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சட்னி ரெடி. இதை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.