ஹை யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பால் பொருள்கள்

By Gowthami Subramani
07 Feb 2025, 17:50 IST

இரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா எனப்படுகிறது. இது சிறுநீரக கற்கள், கீல்வாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கலாம். அதிக யூரிக் அமில பிரச்சனையைக் கொண்டவர்கள் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும்

ஏன் பால் பொருள்கள்?

சில பால் பொருள்களை உட்கொள்வது யூரிக் அமில நிலையை மேலும் மோசமாக்குகின்றன. இதில் அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில பால் பொருள்களைக் காணலாம்

முழு பால் அருந்துவது

முழு பால் சுவையானதாகும். ஆனால் இதில் அதிக கொழுப்பு இருக்கலாம். இது யூரிக் அமில அளவை அதிகரிக்கக்கூடும். இதற்குப் பதிலாக, குறைந்த கொழுப்புள்ள பாலுக்கு மாற முயற்சிக்கலாம்

கிரீம்

காபியிலோ அல்லது இனிப்புப் பொருளிலோ இருந்தாலும், கிரீமி பொருட்கள் வெடிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே கனமான கிரீமுக்கு பதிலாக தயிர் அல்லது தேங்காய் கிரீம் போன்ற இலகுவான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்கலாம்

முழு கொழுப்புள்ள சீஸ்

சீஸ் பலருக்கு பிடித்தமானதாகும். ஆனால், முழு கொழுப்புள்ள சீஸ் ஆனது பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க குறைந்த கொழுப்பு அல்லது குறைக்கப்பட்ட கொழுப்புள்ள சீஸைத் தேர்வு செய்ய வேண்டும்

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அதிக யூரிக் அமில அளவை மோசமாக்கலாம். மாற்றாக, புத்துணர்ச்சியூட்டும், கீல்வாதத்திற்கு ஏற்ற பழ ஐஸ்களை முயற்சிக்கலாம்

வெண்ணெய்

இது கொழுப்பு நிறைந்ததாகும். மேலும், அதிக யூரிக் அமிலத்தை நிர்வகிக்கும்போது, ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது