இவங்க மறந்தும் பீட்ரூட்டைத் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது

By Gowthami Subramani
15 Jun 2025, 20:52 IST

உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிடலாம். இது உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், சில சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்

ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், பீட்ரூட்டை சிலர் ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து காணலாம்

ஏன் தவிர்க்க வேண்டும்

பீட்ரூட்டில் அதிகளவிலான ஆக்சலேட்டுகள் இருப்பதால் இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில், அதிக ஆக்சலேட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஒருவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

சிறுநீரின் நிறம்

பீட்ரூட்டை சாப்பிடுவது பெட்டூரியா பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் மலம் மற்றும் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம். இது அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படலாம்

குறைந்த இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்கள் பீட்ரூட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும் அபாயம் ஏற்படலாம்

இரத்த சர்க்கரை அளவு

பீட்ரூட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஏனெனில் இதில் அதிகளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது

சிறுநீரகக் கற்கள்

பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் நிறைந்திருப்பதால், இவை சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம்

தோல் ஒவ்வாமை

பீட்ரூட்டை அதிகம் சாப்பிடுவதால் அனாபிலாக்ஸிஸை என்ற ஒரு வகையான ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். இதனால் அரிப்பு, வீக்கம் மற்றும் தடிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது

மேலே கூறப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் பீட்ரூட் உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்