மலச்சிக்கல் பிரச்சனை அடியோடு சரியாக பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க!

By Karthick M
21 Jun 2025, 21:20 IST

பேரிக்காயில் அதிக அளவு சத்து மற்றும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இதில், வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும். போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கும், இது குடல் இயக்கத்தை எளிதாக்கும்.

மலச்சிக்கல் ஏற்பட்டால் பேரிக்காய் சாறு குடிக்கலாம். பெரிய அளவு பேரிக்காயை எடுத்து, அதன் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம்.

பேரிக்காயை ஃப்ரூட் சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம். சாலட் செய்ய பப்பாளி, கொய்யா, ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.