சிக்கன் லெக் அல்லது சிக்கன் நெஞ்சு இறைச்சி: எது பெஸ்ட்?

By Karthick M
29 Aug 2024, 21:50 IST

அசைவப் பிரியர்களையும் சிக்கனையும் பிரிக்கவே முடியாது. கோழியின் எந்த பகுதி இறைச்சி உடலுக்கு ஆரோக்கியமானது என தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்கன் லெக் Vs சிக்கன் மார்பக இறைச்சி

கோழி இறைச்சியில் கோழி லெக் பீஸ், கோழி நெஞ்சு இறைச்சி என இரண்டாக பிரிக்கலாம். இப்படிதான் விற்பனையும் செய்யப்படுகிறது. இதில் எது ஆரோக்கியம் தெரியுமா?

கொழுப்பு அதிகம்

மார்பகத் துண்டுடன் ஒப்பிடும்போது கோழி லெக் பீஸ் சற்று கொழுப்பு அதிமாகும். ஆனால் சுவை இதில்தான் அதிகம்.

லெக் பீஸ் நன்மைகள்

கால் இறைச்சி இரும்பு, துத்தநாகம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.

குறைந்த அளவு கொழுப்பு

சிக்கன் மார்பகம் லீன் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர்களின் தேர்வாகும். இதில் லெக் பீஸ்ஸை விட கொழுப்பு குறைவு.

எது பெஸ்ட்?

எதுவாகினும் கோழி லெக் பீஸ் விட மார்பக பகுதி இறைச்சி தான் சிறந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. மார்பக இறைச்சியில் அதிக புரதம் உள்ளது.