தினசரி வெல்லம்
தினசரி காலையில் எழுந்தவுடன் வெல்லம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதன் நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.
சத்துக்கள் அதிகம்
வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் தாமிரம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
எடை குறையும்
வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். இது செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இதில் ஃபுகாரோஸ் உள்ளது. இது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
ஆற்றல் அதிகரிக்கும்
வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு கார்போஹைட்ரேட் கிடைக்கும். இதனால் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். வெல்லம் உடல் சோர்வை நீக்க உதவும்.
இரும்புச்சத்து குறைபாடு
வெல்லத்தில் இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனை
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கும் இது தீர்வளிக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். வெல்லம் இதுபோன்ற பல நன்மைகளை அளிக்கும்.