கோடை இரவில் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
26 Mar 2025, 16:16 IST

உடல் சூட்டைக் குறைக்கும் கோடையில் அதிகமான வெப்பத்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தயிரில் உள்ள இயற்கை குளிர்ச்சியூட்டும் தன்மை, உடலை தணிய செய்ய உதவும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தயிரில் உள்ள ப்ரோபயாட்டிக்ஸ் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, ஜீரண கோளாறுகளை குறைக்கும். அசிடிட்டி, வாயுத்தொந்தரவு, வயிற்று வலி போன்றவை தவிர்க்கலாம்.

நீரிழிவு குறையும்

கோடையில் அதிக வியர்வை காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையலாம். தயிரில் உள்ள நீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள், நீரிழிவை சமநிலைப்படுத்த உதவும்.

எடை கட்டுப்பாட்டில் உதவும்

தயிரில் உயர் அளவு புரதச்சத்து இருப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு, அதிகம் சாப்பிடாமல் இருக்கலாம். இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

எலும்புகள், பற்களுக்கு வலிமை

தயிரில் உள்ள கால்சியம், விட்டமின் D போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தும். இதனால் எலும்புகளின் வலிமை அதிகரித்து, பற்கள் உறுதியாக இருக்கும்.

மனஅழுத்தம்,தூக்கமின்மைக்கு குட்பை

தயிரில் உள்ள மெலட்டோனின் மற்றும் அமினோ அமிலங்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து, நன்மை பயக்கும் தூக்கத்திற்காக உதவும்.

சரும ஆரோக்கியம்

தயிரில் உள்ள விட்டமின் E, ஜிங்க், லாக்டிக் ஆசிட் போன்றவை சருமத்தை மென்மையாக & பளபளப்பாக வைத்திருக்க உதவும். கோடையில் தோல் அதிக வறட்சியாகி சூரிய ஒளியில் பாதிக்கப்படும், தயிர் இதனை சமநிலைப்படுத்தும்.