பாதாம் பருப்பும் கோடை வெயிலும்
ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நட்ஸ் வகைகளில் பிரதானமாக இருப்பது பாதாம். இதன் தன்மை சூடாக இருக்கும். எனவே கோடையில் இதை சாப்பிடலாமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடையில் பாதாம்
இதுகுறித்து நிபுணர் கூறுகையில், பாதாம் உஷ்ண குணம் கொண்டது. எனவே கோடையில் இதை ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது. மேலும் குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடுங்கள்.
பாதாமில் உள்ள சத்துக்கள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாதாமில் உள்ளன.
கோடையில் பாதாமை எப்படி சாப்பிடலாம்?
பாதாம் சூடான தன்மை கொண்டது. இதை கோடையில் சாப்பிடுகையில் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பாதாமை தோலை எடுத்து சாப்பிடுங்கள்.
எத்தனை பாதாம் சாப்பிடலாம்?
கோடையில் பாதாமை ஊறவைத்து குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். வறுத்த பாதாம் பருப்பு என்றால் 3-5, ஊறவைத்த பாதம் என்றால் 2 மட்டுமே சாப்பிட வேண்டும்.
பாதாம் சாப்பிட சரியான நேரம்
பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி காலையில் சாப்பிடலாம். இதனால் முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
பாதாம் சாப்பிடுவது இதுபோன்ற பல நன்மைகளை வழங்கும் என்றாலும் கோடையில் சாப்பிடும் போது இந்த வழிகளை பின்பற்றி சாப்பிடுவது நல்லது.