ரம் மற்றும் பிராந்தி குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவித்தாலும், குளிர்காலத்தில் சிறிய அளவில் உட்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் விரிவாக பார்க்கலாம்.
நிபுணர்கள் கூறுவது
டாக்டர் திலீஷ் மாலிக் கருத்துப்படி, குளிர்காலத்தில் 30 முதல் 60 மில்லி ரம் அல்லது பிராந்தி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ரம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. தவிர, இதயம் தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகிறது.
சுவாச பிரச்சனை
குளிர்காலத்தில் காற்று மாசுபடுவதால் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்நிலையில், பிராந்தி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில், உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
வலியில் இருந்து நிவாரணம்
குளிர்காலத்தில் ரம் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும். மேலும், உடலில் உள்ள வலியை நீக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, சிறிய அளவில் ரம் குடிப்பதால் தசை வலியும் நீங்கும்.
கொலஸ்ட்ரால் குறையும்
பிராந்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தின் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, அதன் குறைந்த நுகர்வு மாரடைப்பு அபாயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
குளிரில் இருந்து பாதுகாக்க
குளிரின் போது பிராந்தி குடிப்பதால் உடல் சூடாக இருக்கும், இதன் காரணமாக குளிர்ச்சியை உணர மாட்டோம். மேலும், இதை தேனுடன் கலந்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.