வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க உதவுமா?

By Devaki Jeganathan
05 Dec 2024, 12:54 IST

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களின் தேர்வு வெள்ளரிக்காய். ஏனென்றால், இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வெள்ளரிகளில் கலோரிகள் குறைவு. மேலும் இதில் நல்ல அளவு நீர் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அவை உடலில் நீரேற்றத்தை மேம்படுத்துவதற்கும் எடை இழப்புக்கு உதவுவதற்கும் சிறந்தவை.

கலோரிகள் குறைவு

100 கிராம் வெள்ளரிக்காயில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளது. மினி வெள்ளரிகள், காக்டெய்ல் வெள்ளரி வகை உள்ளது கலோரிகளில் இன்னும் குறைவாக உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் எட்டு கலோரிகள் மட்டுமே.

தண்ணீர் அதிகம்

வெள்ளரிகள் நீரேற்றத்தின் சிறந்த மூலமாகும். இது எடை இழப்புக்கு உதவும்.

பசியைப் போக்கும்

வெள்ளரிகள் பசியைப் பூர்த்தி செய்ய உதவும். இது அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

சிறந்த செரிமானம்

சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வெள்ளரிகள் செரிமானத்திற்கு உதவும்.

வளர்சிதை மாற்றம்

வெள்ளரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீரேற்றம் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

எப்படி சாப்பிடணும்?

சாலடுகள், சாண்ட்விச்கள் மற்றும் பிற உணவுகளில் நீங்கள் வெள்ளரிகளை புதியதாகவோ அல்லது ஊறுகாய்களாகவோ சாப்பிடலாம். நீங்கள் வெள்ளரிக்காய் தண்ணீர், ஸ்மூத்தி அல்லது வெள்ளரிக்காய் தக்காளி சாலட்டையும் செய்யலாம்.

வெள்ளரி சாப்பிட சிறந்த நேரம்?

வெள்ளரிக்காய் சாப்பிட சிறந்த நேரம் பகல் நேரம். குறிப்பாக காலையில் அல்லது உணவுக்கு இடையில் சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.