இரும்பு போல வலுவான எலும்புக்கு கால்சியம் நிறைந்த வெஜ் உணவுகள்

By Gowthami Subramani
18 Feb 2025, 17:19 IST

எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் கால்சியம் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு கால்சியம் நிறைந்த உணவுகளில் பாலைத் தவிர வேறு சில சைவ உணவுகளும் அடங்கும். இதில் எலும்பு ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த சைவ உணவுகளைக் காணலாம்

ராகி

ராகி ஒரு பாரம்பரிய இந்திய சூப்பர்ஃபுட் ஆகும். இதில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ராகியை கஞ்சி, ரொட்டி அல்லது தோசை போன்ற பல்வேறு ரெசிபியாக எடுத்துக் கொள்ளலாம்

பாதாம்

தினமும் ஒரு சில பாதாம் உட்கொள்வது நல்ல கால்சியம் அளவை அதிகரிக்கிறது. இதற்கு இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை பாலில் கலந்து காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம்

கீரை

இலை கீரையானது ஒரு சிறந்த தாவர அடிப்படையிலான கால்சியம் நிறைந்த மூலமாகும். இதை கறி, பருப்பு வகைகள் போன்றவற்றில் சேர்க்கலாம் அல்லது டோஃபுவுடன் பாலக் பனீர் சேர்த்து ஆரோக்கியமான உணவாக தயார் செய்யலாம்

டோஃபு

சோயாபீன்களிலிருந்து தயார் செய்யப்படும் டோஃபு கால்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். இதை கறிகளில் வறுக்கலாம் அல்லது இந்திய உணவுகளில் பனீர் மாற்றாக பயன்படுத்தலாம்

எள் விதைகள்

இந்த சிறிய விதைகள் கால்சியத்தால் நிரம்பியதாகும். இதை சட்னிகளில் சேர்க்கலாம், சாலட்கள் அல்லது வேறு சில உணவுகளில் சேர்க்கலாம். இதை உணவில் சேர்ப்பது கால்சியம் நிறைந்த கூடுதலாக அமைகிறது

சியா விதைகள்

கால்சியம் நிறைந்த சியா விதைகளை தண்ணீர் அல்லது தாவர அடிப்படையிலான பாலில் ஊறவைத்து புட்டுகளைத் தயார் செய்யலாம் அல்லது சியா விதைகளைக் கொண்டு ஸ்மூத்தி தயார் செய்யலாம்