30 வயது பெண்கள் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்

By Gowthami Subramani
27 Feb 2025, 20:14 IST

பெண்கள் உடலை வலுப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். குறிப்பாக பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பிறகு, எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இதில் உடலை வலுப்படுத்த பெண்கள் 30 வயதில் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகளைக் காணலாம்

எள் விதைகள்

இது கால்சியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்றாகும். எள் விதைகளை உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தியை ஆதரிக்கவும் உதவுகிறது

பாதாம்

ஒரு கைப்பிடி அளவிலான பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும் இதில் நல்ல அளவிலான கால்சியத்தை வழங்குகிறது

பனீர்

இது கால்சியம் நிறைந்த சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அன்றாட உணவில் போதுமான அளவு பனீரைச் சேர்ப்பது எலும்பு வலிமைக்கு உதவும் புரதத்தை வழங்குகிறது

ராகி

இது பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். இது கால்சியத்தின் நல்ல மூலமாக இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

தயிர்

தயிர் ஆனது கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளால் நிறைந்ததாகும். இது குடல் ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

இலை கீரைகள்

இது கால்சியம் மற்றும் வலுவான எலும்புகளை ஆதரிக்கக் கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது