கால்சியத்தின் சிறந்த மூலமாக பால் திகழ்கிறது. ஆனால் சிலர் பால் குடிக்கமாட்டார்கள். அப்படியானவர்களுக்கு பாலுக்கு சிறந்த மாற்று இங்கே.
இலை காய்கறிகள்
கீரை, முட்டைகோஸ் போன்ற இலை காய்கறிகளில் கால்சியம் நிறைந்துள்ளது. இதனை சாலட்டில் கலந்து சாப்பிடலாம்.
பாதாம்
தினமும் காலையில் தண்ணீரில் ஊற வைத்த பாதம் சாப்பிடவும். அல்லது இதனை ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடவும். இது கால்சியத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது.
தயிர்
பாலை விட தயிரில் சிறந்த அளவிலான கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கும்.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் நல்ல அளவிலான கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு சிறந்ததாக உள்ளது.