பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பானது. ஆனால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதே போல அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாகற்காய் விதைகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
பாகற்காய் விதையின் பண்புகள்
நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில், பாகற்காய் விதைகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், பாகற்காய் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
பாகற்காய் விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், அவற்றை சரியாக உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
வயிற்றுப் புழுக்கள்
உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ வயிற்றுப் புழு பிரச்சனை இருந்தால், பாகற்காய் விதைகளை உலர்த்தி லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதனை உட்கொள்வதால் வயிற்றுப் புழு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை குறையும்
உடல் எடையை குறைக்க நினைத்தால், பாகற்காய் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது எடை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
உங்கள் உணவில் பாகற்காய் விதைகளை சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இந்நிலையில், உடல் பருவகால நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெறுகிறது.