தசை மீட்பு மற்றும் வலிமைக்கு ஒமேகா-3 மிகவும் அவசியமான ஒன்றாகும். இது அசைவ உணவுகளில் மட்டுமல்ல. சில ஆரோக்கியமான சைவ உணவிலும் ஒமேகா-3 நிறைந்துள்ளது. இதில் தசை மீட்பு மற்றும் வலிமைக்கு உதவும் ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகளைக் காணலாம்
தசை வலிமைக்கு ஏன் ஒமேகா-3
பொதுவாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தசை வீக்கத்தைக் குறைக்கவும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மீட்பை விரைவுபடுத்தவும் உதவுகிறது. இவை அனைத்துமே உடல் கட்டமைப்பிற்கு அவசியமாகும்
ஆளி விதைகள்
ஒமேகா-3 நிறைந்த சிறந்த மூலமான ஆளி விதைகள் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.இது இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பொதுவான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது
சணல் விதைகள்
இது ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் ஒப்பீட்டளவில் சமமான விகிதத்தைக் கொண்டதாகும். எனவே இது தசை அதிகரிப்பு மற்றும் தசைகளில் மீட்சியை ஊக்குவிக்கிறது
வால்நட்ஸ்
மொறுமொறுப்பான நட்ஸ் வகையான வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது உடல் வலிமைக்கு உதவுகிறது. மேலும், இது ஒரு நல்ல உடல் கட்டமைப்பு உணவாக அமைகிறது
சியா விதைகள்
இது ஒமேகா-3, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த விதையாகும். இவை தசைகளை ஆதரிக்கிறது மற்றும் பொதுவாக உடற்பயிற்சிக்குப் பிந்தைய காலத்தில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
இந்த ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பது இயற்கையாகவே உடற்கட்டமைப்பு இலக்குகளை மேம்படுத்த உதவுகிறது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3 சப்ளிமெண்ட்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதை எடுத்துக் கொள்ளும் முன்பாக, மருத்துவரை அணுகுவது நல்லது