சுட்டெரிக்கும் வெயிலில் இந்த காய்கறிகளை எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
19 Apr 2024, 19:20 IST

கோடைக்கால உணவில் காய்கறிகளைச் சேர்ப்பது சுவையுடன் கூடிய உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வெள்ளரிக்காய்

இது நீரேற்றம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களைக் கொண்டதாகும். இது வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது

தக்காளி

இதில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

கீரை

கீரை சிறந்த ஊட்டச்சத்து மிக்க அடர்த்தியான பச்சை காய்கறியாகும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரித்து செரிமானத்திற்கு உதவுகிறது

முள்ளங்கி

இது நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலமாகும். இவை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல்லைத் தடுக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது

குடை மிளகாய்

இது நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல்லைத் தடுக்கிறது. இவை வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கிறது

கேரட்

இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது குடல் இயக்கத்தை சீராக வைப்பதுடன் ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இவை பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கிறது

சுரைக்காய்

சீமை சுரைக்காய் நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இவை குடல் இயக்கத்தை சீராக வைப்பதுடன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது கோடை மாதங்களில் உடல் எடை குறைய சிறந்த தேர்வாக அமைகிறது

முட்டைக்கோஸ்

இது சல்பர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். இவை செரிமானத்தை ஆதரித்து குடல் இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது