அதிகபட்ச நன்மையை பெற எந்த சப்ளிமெண்ட்களை எப்போது எடுக்கணும்?

By Devaki Jeganathan
12 May 2025, 15:49 IST

கொலாஜன்

கொலாஜன் சப்ளிமெண்ட் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. மேலும், உங்கள் உணவில் காய்கறி ஜூஸ்களை சேர்க்கலாம்.

வைட்டமின் D3

வைட்டமின் D3 சப்ளிமெண்ட்களை மதிய உணவுக்குப் பிறகு 30 நிமிடங்கள் கழித்து கழித்து ஒரு கிளாஸ் மோருடன் சேர்த்து சாப்பிடலாம்.

மெக்னீசியம் கிளைசினேட்

மெக்னீசியம் சப்ளிமெண்ட்களை படுக்கைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது தளர்வு மற்றும் தூக்கத்திற்கு உதவுகிறது.

புரோபயாடிக் சப்ளிமெண்ட்

புரோபயாடிக் சப்ளிமெண்ட்காலை பொதுவாக வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சப்ளிமெண்ட் வகையைப் பொறுத்து நேரங்கள் மாறுபடலாம்.

வைட்டமின் B12

வைட்டமின் B12 சப்ளிமெண்ட்களை காலை உணவுக்குப் பிறகு 30 நிமிடங்கள் கழித்து அல்லது மத்திய உணவுக்கு பின் எடுத்துக்கொள்ளலாம்.

ஒமேகா-3

ஒமேகா 3 சப்ளிமெண்ட்களின் முழுமையான பயனை பெற மதிய உணவுக்குப் பிறகு 30 நிமிடங்கள் கழித்து சாப்பிடுவது நல்லது.

புரத சப்ளிமெண்ட்

ஜிம்மிற்கு செல்லும் அனைவரும் புரத சப்ளிமெண்ட்களை எடுப்பது வழக்கம். புரத சப்ளிமெண்ட்களை உடற்பயிற்சி செய்த பின் 20 நிமிடங்கள் கழித்து சாப்பிடவும்.

மல்டிவைட்டமின்

மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்களை மதிய உணவிற்கு சிறந்தது. ஆனால், தேநீர் அல்லது காபியுடன் இணைப்பதைத் தவிர்க்கவும்.

அயர்ன்

இரும்பு சத்து சப்ளிமெண்ட்களை காலை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், இது உறிஞ்சுதலை அதிகரிக்க வைட்டமின் சி உடன் இணைக்கவும். வைட்டமின் சி சப்ளிமெண்ட்களை காலை உணவுக்கு சாப்பிடவும்.

கால்சியம்

காலை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால், காபி அல்லது இரும்புடன் அல்ல.