முருங்கைப் பொடியை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது?

By Gowthami Subramani
16 Sep 2024, 09:40 IST

முருங்கைப் பொடியை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் முருங்கைப் பொடியை எந்த நேரத்தில் உட்கொண்டால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்

முருங்கை இலைகளிலிருந்து தயார் செய்யப்படும் முருங்கைத் தூள், அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது

வெறும் வயிற்றில்

முருங்கைப் பொடியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால், உடலில் நச்சுக்களை நீக்கி ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது

உணவுடன் உட்கொள்வது

நாள் முழுவதும் பல முறை உணவுடன் சிறிய அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம், உடலில் ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்

மதியம் அல்லது இரவு உணவுடன்

சில ஆய்வுகளின் படி, மதிய உணவு அல்லது இரவு உணவுடன் முருங்கைப் பொடியை எடுத்துக்கொள்வது ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது

மருத்துவ ஆலோசனை

புதிய உணவுப் பொருட்களைத் தொடங்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. குறிப்பாக, வேறு ஏதேனும் மருத்துவ நிலை கொண்டிருப்பின், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்தப் பொடியை உட்கொள்ள வேண்டும்