பெருஞ்சீரகம் உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்க, பசியைக் கட்டுப்படுத்த மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் நாள் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்திற்கு பெருஞ்சீரகத்தை எப்போது எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்
காலை செரிமானத்தை அதிகரிக்க
ஒரு கிளாஸ் பெருஞ்சீரகம் தண்ணீருடன் நாளைத் தொடங்குவது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது
உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம்
உணவு உண்ட பிறகு பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடுவது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் உள்ள அனெத்தோல் என்ற கலவை செரிமான அமைப்பைத் தூண்டவும், அசௌகரியத்தை எளிதாக்கவும் உதவுகிறது
மலச்சிக்கலைத் தடுக்க
மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் அழற்சியைத் தடுப்பதற்கு பெருஞ்சீரக விதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் வயிற்றை சூடாக்க உதவுகிறது. மேலும், இது குடலியக்கத்தை ஆதரிக்கிறது
பசியைக் கட்டுப்படுத்துவதற்கு
பெருஞ்சீரகம் விதைகள் காலை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை எடை நிர்வாகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது
வாயுவைத் தவிர்க்க
பெருஞ்சீரகம் விதைகளை உட்கொள்வது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது