மாம்பழம் சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?

By Devaki Jeganathan
14 May 2025, 09:49 IST

யாருக்குத்தான் மாம்பழம் புடிக்காது. மாம்பழம் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. ஆனால், தவறான நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்து தெரியுமா? மாம்பழம் சாப்பிட சரியான நேரம் எது? எந்த நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்? என பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் மாம்பழம்

காலையில் வெறும் வயிற்றில் மாம்பழம் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதில், இயற்கை சர்க்கரை உள்ளது. இது வெறும் வயிற்றில் செரிமானத்தை கெடுக்கும்.

இரவில் மாம்பழம் சாப்பிடுவது

இரவில் தாமதமாக மாம்பழம் சாப்பிடுவதால் உடலால் அதை ஜீரணிக்க முடியாது. இது கூடுதல் சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது. இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கலாம்.

உணவுக்குப் பிறகு மாம்பழம்

உணவுக்குப் பிறகு உடனடியாக மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது வாயு, அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவுக்கு இடையில் மாம்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

அதிக மாம்பழம்

நீங்கள் ஒரு நாளைக்கு அதிக முறை மாம்பழங்களை சாப்பிட்டால், அது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கும். இது சர்க்கரையை அதிகரிக்கிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

உடற்பயிற்சிக்கு பிறகு

அதிக வெப்பத்தில் இருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ உங்களுக்கு வியர்வை வந்திருந்தால், அதற்குப் பிறகு உடனடியாக மாம்பழம் சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரித்து, நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

தொண்டை புண் அல்லது சளி

உங்களுக்கு தொண்டை வலி அல்லது சளி இருந்தால், மாம்பழம் சாப்பிடுவது தொண்டை பிரச்சனையை அதிகரிக்கும். மாம்பழத்தின் தன்மை காரமானது, இது சளி மற்றும் இருமல் பிரச்சனையை அதிகரிக்கும்.

மாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கலாமா?

முழுமையாக குளிரூட்டப்பட்ட மாம்பழத்தை நேரடியாக சாப்பிடுவது தொண்டை பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் உடலில் சூடான-குளிர் விளைவை ஏற்படுத்தும். சிறிது நேரம் வெளியில் வைத்திருந்து பின்னர் சாப்பிடுவது நன்மை பயக்கும்.