உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சில ஆரோக்கியமான சப்ளிமென்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். அதில் சிலவற்றைக் காணலாம்
வைட்டமின் ஏ
இது சுவாசம் மற்றும் இரைப்பைக் குழாயில் உள்ள சளி சவ்வுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், தொற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது
வைட்டமின் டி
இது நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊடச்சத்துக்கள் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மோனோசைட்டுகள் மற்றும் மேக்ரோபேஜ்களின் நோய்க்கிருமி எதிர்ப்பு விளைவுகளை மேம்படுத்துகிறது
வைட்டமின் சி
இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுவதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது
துத்தநாகம்
துத்தநாகம் நோயெதிர்ப்பு உயிரணு வளர்ச்சிக்கு அவசியமானதாகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ஜலதோஷத்தின் கால அளவைக் குறைப்பதுடன், சுவாசக்குழாய் தொற்றுகளைத் தடுக்கிறது
செலினியம்
இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டி, சளி மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனை அதிகரிக்கிறது
புரோபயாடிக்குகள்
இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ஆகும். இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் அமைப்புக்கு முக்கியமானது. ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளின் .வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது
குர்குமின்
இது மஞ்சளில் நிறைந்துள்ள பொருளாகும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், தொற்று அபாயத்தைக் குறைக்கிறது