நல்ல செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு புரோபயாடிக் ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமாகும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும் இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோபயாடிக் நிறந்த பானங்களைக் காணலாம்
கெஃபிர்
கெஃபிர் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த ஒரு புளித்த பால் பானமாகும். இந்த பானம் அருந்துவது செரிமானத்தை ஆதரிக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
கஞ்சி
இது கருப்பு கேரட் மற்றும் கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புளித்த பானமாகும். இவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய ஒரு இயற்கையான புரோபயாடிக் நிறைந்த பானமாகும்
தயிர் சார்ந்த பானங்கள்
லஸ்ஸி, மோர் போன்றவை புரோபயாடிக்குகள் நிறைந்த பிரபலமான தயிர் சார்ந்த பானமாகும். இது ஆரோக்கியமான குடலை மேம்படுத்தவும், செரிமான அமைப்பை அமைதிப்படுத்தவும் உதவுகிறது
ஊறுகாய் சாறு
புளித்த ஊறுகாய் சாற்றில் நிறைந்துள்ள பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது இயற்கையாகவே புளித்த வகைகளைத் தேர்வுசெய்ய வேண்டும்
கொம்புச்சா
இது புளிக்க வைக்கப்பட்ட, லேசாக நுரைத்த, இனிப்பு கருப்பு தேநீர் பானம் ஆகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை நச்சு நீக்கவும் உதவுகிறது
இந்த புரோபயாடிக்குகள் நிறைந்த பானங்களை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்