அதிகளவு யூரிக் அமிலம், கீல்வாதம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக மூட்டுகளில் கல் போன்ற விறைப்பு வலியை பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். எனவே யூரிக் அமில அளவைக் குறைப்பது அவசியமாகும். இதில் யூரிக் அமில அளவைக் குறைப்பதற்கு காலையில் குடிக்க வேண்டிய பானங்களைக் காணலாம்
கிரீன் டீ
இது யூரிக் அமில உற்பத்தியைப் பாதிக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளைப் பெற ஒரு நாளைக்கு ஒரு கப் அளவிலான கிரீன் டீ-யை அருந்தலாம்
இஞ்சி டீ
இது உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதன் மூட்டு வலியைக் குறைக்கலாம். இஞ்சி டீயில் சுவைக்காக சிறிது தேன் சேர்க்கலாம்
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் அருந்துவது யூரிக் அமிலத்தை நடுநிலையாக்கி நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஒரு நல்ல தேர்வாகும்
டீடாக்ஸ் தண்ணீர்
யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும் புதினா உட்கொள்வது வீக்கத்தை அமைதிப்படுத்துகிறது. வெள்ளரிக்காய், புதினா கலந்த இந்த டிடாக்ஸ் தண்ணீரை ஒரு குவளையில் வைத்துக் கொண்டு நாள் முழுவதும் பருகலாம்
ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து அருந்துவது உடலில் யூரிக் அமிலத்தை உடைக்க உதவுகிறது. மேலும், இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது
குறிப்பு
அதிகபட்ச செயல்திறனை அடைய, இந்த காலை பானங்களை அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்வதுடன், சீரான உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம்