ஆரோக்கியமான குடல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் குறிப்பதாகும். குடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். இதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் குடிக்க வேண்டிய பானத்தைக் காணலாம்
குடல் ஆரோக்கியம்
குடல் ஆரோக்கியத்திற்கு பானங்களை அருந்துவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் இவை நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கவும், வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது
தண்ணீர்
தண்ணீர் நாம் உட்கொள்ளக்கூடிய மிக அடிப்படையான பானமாகும். ஒரு நாளைக்குக் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்
தேங்காய் தண்ணீர்
செரிமான கோளாறு பிரச்சனைகளுக்கு தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த தேர்வாகும். இது ஒரு சிறந்த எலக்ட்ரோலைட் பானங்களில் ஒன்றாகும். இந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கத்தைத் தடுக்கிறது. வயிற்றில் ஆரோக்கியமான pH சமநிலையை பராமரிக்கிறது
மோர்
இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆற்றல் மிக்க பானமாகும். இதில் உள்ள புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இந்த பானம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும், சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது
கொம்புச்சா
இது புரோபயாடிக்குகள் மற்றும் என்சைம்கள் நிறைந்த புளித்த தேநீர் ஆகும். இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்த மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறு ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த பானமாகும். இது வயிற்று அமிலத்தை அதிகரித்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
மூலிகை தேநீர்
குடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மூலிகை தேநீர் சிறந்த பானமாகும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான மேம்பாட்டிற்கும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் மிளகுக்கீரை, இஞ்சி மற்றும் கெமோமில் போன்ற மூலிகை டீக்களை அருந்தலாம்