தினமும் நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய பருப்பு வகைகள்

By Gowthami Subramani
21 Aug 2024, 16:00 IST

உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வில் சில பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பருப்பு வகைகளைக் காணலாம்

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் சனா பருப்பு இனிப்பு மற்றும் சத்தானவையாகும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்

பச்சைப்பயிறு

உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் பச்சைப்பயிறு பெரிதும் உதவுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது

உளுத்தம் பருப்பு

இந்த பருப்பில் புரதம், வைட்டமின் பி3, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவுகிறது

சிவப்பு பருப்பு

இது மஞ்சள் பருப்பை விட 30% அதிக பொட்டாசியம் நிறைந்ததாகும். எனவே பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பருப்பை உட்கொள்ளலாம்

துவரம் பருப்பு

இது தாவர புரதத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் போன்றவை உள்ளது. இதில் உள்ள நல்ல கார்போஹைட்ரேட்டுகள் பசியை கட்டுப்படுத்தவும், நீரிழிவு, இதய பிரச்சனைகளுக்கும் உதவுகிறது