அன்றாட வாழ்க்கையில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இதில் கண்கள் பலவீனமாகி கண்ணாடி இல்லாமல் பார்க்கும் சூழல் ஏற்படும். இதைத் தவிர்க்க சில ஆரோக்கியமான பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்
ஆம்லா ஜூஸ்
நெல்லிக்காயில் நல்ல அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவை கண்பார்வை மேம்பாட்டிற்கு பெரிதளவில் உதவுகின்றன. இந்த சாறு குடிப்பது கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது
கேரட், பீட்ரூட், ஆப்பிள் சாறு
ABC என்ற கேரட், பீட்ரூட், ஆப்பிள் சாறு போன்றவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்களே காரணமாகும்
ப்ரோக்கோலி மற்றும் கீரை சாறு
பச்சைக் காய்கறிகள் இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், வைட்டமின் ஏ, சி, மற்றும் கே போன்றவை நிறைந்துள்ளன. இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது
தக்காளி சாறு
தக்காளியில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்றவை காணப்படுகிறது. இவை முதுமை அடைவதால் ஏற்படும் கண் பலவீன பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது
வாழைப்பழம் மற்றும் பாதாம் சாறு
வாழைப்பத்தில் லுடீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. மேலும், இதில் ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட்ஸ்களை சேர்க்கலாம். அக்ரூட் பருப்புகளில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு சாறு அருந்துவது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்களே காரணமாகும்
தேங்காய் தண்ணீர்
இளநீர் அல்லது தேங்காய் நீரில் வைட்டமின் சி, தாதுக்கள், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் போன்றவை காணப்படுகின்றன. இது கண் திசுக்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
கண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த சாறுகளை சேர்த்துக் கொள்ளலாம். எனினும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சாறுகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது