எடை இழப்புக்கு மூலிகை தேநீர்
மூலிகை தேநீர் இனிமையான சுவைக்காக மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது பல்வேறு நன்மைகளுக்காக குறிப்பாக எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் எடை இழப்புக்கு உதவும் கிரீன் டீக்களைக் காணலாம்
துளசி டீ
துளசி டீ அருந்துவது உடலில் கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தி, மன அழுத்தத்தால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதன் அடாப்டோஜெனிக் பண்புகள் மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்ற செயல்பாட்டிற்கும் உதவுகிறது
செம்பருத்தி டீ
இது கசப்பான சுவையுடன் ஆக்ஸிஜனேற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. செம்பருத்தி சாறு உடலில் கொழுப்பு திரட்சியைக் குறைக்கிறது
புதினா டீ
இந்த டீ அருந்துவது புத்துணர்ச்சியூட்டுவதுடன், பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஏற்படுத்தலாம். இதன் வாசனை பசியைக் குறைக்க உதவுகிறது. இது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது
கிரீன் டீ
இது உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் பிரபலமான பானமாகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக கேட்டசின்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது
இஞ்சி டீ
இது செரிமான பண்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். இஞ்சி டீ அருந்துவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கவும், பசி அதிகரிப்பைக் குறைக்கவும் உதவும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கும்
இலவங்கப்பட்டை டீ
இந்த டீ அருந்துவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் இது பசி மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது
பெருஞ்சீரகம் டீ
இது செரிமானம் மற்றும் வீக்கத்திற்கு உதவும் சிறந்த தேநீர் ஆகும். இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. பெருஞ்சீரக விதைகள் பசியைக் குறைக்கவும், முழுமை நிறைந்த உணர்வையும் தருகிறது. இது உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது