குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த பச்சை இலை காய்கறிகள்

By Gowthami Subramani
22 Dec 2024, 23:09 IST

பொதுவாக பச்சை இலைக் காய்கறிகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்ச்சியான காலநிலையில் சாப்பிட வேண்டிய பச்சை இலைக் காய்கறிகளைக் காணலாம்

கீரை

இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

கடுகு கீரைகள்

கடுகு கீரைகளில் வைட்டமின் ஏ, கே மற்றும் இரும்புச்சத்து தவிர, ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

வெந்தய கீரை

இது இயற்கையில் வெப்பமானதாகும். இதை உட்கொள்வது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்குகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும், பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது

கொத்தமல்லி

இது உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதுடன், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பச்சை இலை காய்கறியாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதுடன், கொலஸ்ட்ராலுக்கும் நன்மை பயக்கும்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்