உங்க கிட்னி ஹெல்த்தியா இருக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

By Gowthami Subramani
29 Apr 2025, 07:39 IST

உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி திரவங்களை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட கால சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்க பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடலாம்

ஆம்லா

இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை சிறுநீரக நச்சு நீக்கத்தை ஆதரிக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது. நீரிழிவு தொடர்பான சிறுநீரக பாதிப்பைத் தடுப்பதற்கும் இது முக்கியமானது

பூண்டு

பூண்டு அழற்சி எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு மற்றும் சுவையானதாகும். மேலும் இதில் மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் சல்பர் சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக அழுத்தத்தைக் குறைத்து நச்சு நீக்கத்தை எளிதாக்க உதவுகின்றன

மஞ்சள்

இதில் உள்ள குர்குமின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரக வீக்கம் மற்றும் ஃபைப்ரோஸிஸைக் குறைக்க உதவுகிறது. இவை இயற்கையாகவே ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டைப் பராமரிக்கின்றன

ஆப்பிள்கள்

ஆப்பிள்கள் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குவதுடன், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. மேலும் இதில் உள்ள குறைந்த அளவிலான பொட்டாசியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக அமைகிறது

சிவப்பு குடை மிளகாய்

இந்த மிளகாயில் வைட்டமின்கள் ஏ, சி, பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளம் உள்ளது. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவுகின்றன

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. இவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது சிறுநீரக ஆதரவில் மாவுச்சத்துள்ள காய்கறிகளுக்கு ஒரு சிறந்த குறைந்த பொட்டாசியம் மாற்றாக அமைகிறது