பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
26 Apr 2024, 15:11 IST

இரத்த பிளேட்லெட் என்பது இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் ஒரு வகையாகும். இது இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எண்ணிக்கை குறைவதால் இரத்தம் உறையாமை ஏற்படலாம். இதில் இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளைக் காணலாம்

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் மிதமான அளவு நுகர்வும் பிளேட்லெட் செயல்பாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது

பூசணி விதைகள்

இந்த விதைகளில் உள்ள துத்தநாகம் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ எலும்பு மஜ்ஜையில் பிளேட்லெட்டுகள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்ததாகும். இந்த வைட்டமின் சி இரும்பை திறம்பட உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கிறது

மீன்

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. இது அதிக இரத்தப்போக்கு அபாயத்தைக் குறைக்கவும், பிளேட்லெட் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது

இலை கீரைகள்

இலை கீரைகள் பொதுவாக இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டுள்ளது. இது இயற்கையாகவே பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகிறது

முழு தானியங்கள்

இது வைட்டமின் பி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான இரத்த செல்களில் பங்கு வகிக்கிறது

மெல்லிய புரதங்கள்

இது புரதங்களின் உற்பத்திக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்களை வழங்குகிறது. இது உகந்த பிளேட்லெட் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாகும்

நட்ஸ்

இது வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இது பிளேட்லெட்டுகள் உட்பட இரத்த அணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது