வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் காணலாம்
செறிவூட்டப்பட்ட தானியங்கள்
பல காலை உணவு தானியங்களில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த்ள்ளது. குறிப்பாக, இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
தயிர் & கிரேக்க தயிர்
இவை இரண்டுமே வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் நிறைததாகும். இதன் உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு கிரீமி மற்றும் சுவையான வழியாக அமைகிறது
முட்டை
முட்டையில் குறிப்பாக மஞ்சள் கருவில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. எனவே அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்ப்பது இயற்கையாகவே பி12 உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்
செறிவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால்
பாதாம், சோயா மற்றும் ஓட்ஸ் பால் போன்றவை வைட்டமின் பி12 உடன் செறிவூட்டப்பட்ட உணவாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12-ஐ அதிகரிக்க இது சிறந்த தேர்வாகும்
பால் பொருட்கள்
பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை வைட்டமின் பி12 நிறைந்த சிறந்த ஆதாரங்களாகும். இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பி12 குறைபாட்டை சரிசெய்வதுடன், ஆரோக்கியமான அளவை பராமரிக்கலாம்
மீன்
டுனா மற்றும் சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் பி12 குறைபாட்டைச் சரி செய்யலாம்