ஆரோக்கியமான பற்களுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

By Gowthami Subramani
16 Oct 2024, 08:00 IST

பற்கள் பராமரிப்பில் பல் துலக்குதல், ஃப்ளோசிங் போன்றவற்றைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பற்களைப் பெற விரும்புபவர்கள் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகளைக் காணலாம்

கேரட்

கேரட் உட்கொள்வது பிளேக்கை அகற்ற உதவுகிறது. இந்த முறுமுறுப்பான கேரட் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும்

வெள்ளரிக்காய்

வெள்ளரி நீரேற்றம் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதாகும். இது பல் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இதன் அதிக நீர் உள்ளடக்கம் பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கழுவ உதவுகிறது

ஆப்பிள்

ஆப்பிள் நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது இயற்கையான பல் துலக்குதல் போல செயல்படுகிறது. மேலும் ஆப்பிள் உட்கொள்வது பற்களை துடைத்து, உமிழ்நீரை அதிகரிக்கிறது

கிரீன் டீ

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை பாக்டீரியாவை எதிர்த்துப் போரடவும், பிளேக்கைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிக்க உதவுகிறது

இலை கீரைகள்

கீரை மற்றும் கோஸ் போன்ற உணவுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை உமிழ்நீரை அதிகரிக்கும் போது வலுவான பற்கள் மற்றும் ஈறுகளை ஆதரிக்க ஏதுவாக அமைகிறது

பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி சீஸ் நிறைந்ததாகும். இவை பற்சிப்பியை பலப்படுத்துகிறது. மேலும் இது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டவும், பற்களை இயற்கையாக சுத்தம் செய்யவும் உதவுகிறது