உடலில் புரதச்சத்து குறைபாட்டை போக்க என்ன சாப்பிடலாம்?

By Karthick M
21 Mar 2024, 02:01 IST

புரோட்டின் குறைபாட்டை சரிசெய்ய உணவுகள்

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க புரதம் முக்கிய ஊட்டச்சத்து. சரியான அளவு புரதத்தை உட்கொள்ளவில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். இதை சரிசெய்ய என்ன சாப்பிடலாம்.

முட்டை

முட்டையில் கால்சியம் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. முட்டை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் பராமரிக்கப்படும்.

உலர் பழங்கள்

உடலில் ப்ரோட்டின் குறைபாட்டை போக்க முந்திரி, வால்நட், பாதாம் போன்ற உலர் பழங்களை சாப்பிடலாம். இந்த உலர் பழங்கள் அனைத்திலும் ஏராளமான புரதச்சத்து உள்ளது.

மீல் மேக்கர்

மீல்மேக்கரில் அதிக புரதம் இருக்கிறது. 100 கிராம் மேல்மேக்கரில் 52 கிராம் புரதம் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையை நீங்கள் தாராளமாக உட்கொள்ளலாம். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதேபோல் உங்களுக்கு ஏதேனும் பிற உடல் அசௌகரியம் இருந்தால் மருத்துவரை அணுகவும்.