கன்ஜக்டிவிட்டிஸ் போன்ற கண் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கண் நோய்த்தொற்றுக்களால் ஏற்படும் சேதத்தைத் தணிக்க ஆற்றல் மிக்க வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுப்பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
சில உணவுப்பொருள்களைச் சேர்த்துக் கொள்வது தொற்றுநோயைத் தடுக்க உதவுவதுடன், குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது
இலை காய்கறிகள்
கீரை மற்றும் வோக்கோசு போன்ற பச்சை இலைக் காய்கறிகள் ஜியாக்சாண்டின் மற்றும் லுடூன் போன்றவற்றின் வளமான ஆதாரங்களாகும். இவை கண்கள் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது
சியா மற்றும் ஆளி விதைகள்
இந்த விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவற்றை காலை உணவு தானியங்கள், தயிர் அல்லது சாலட்டுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இவற்றை உட்கொள்வதன் மூலம் கண் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்