எலும்பை இரும்பாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
03 Aug 2024, 09:00 IST

கால்சியம் குறைபாட்டால் எலும்பு முறிவு, எலும்புகள் பலவீனமடைதல், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம். கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாட்டைத் தவிர்க்கலாம்

பாதாம்

சில பாதாம் வகைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், ஆரோக்கியமான அளவிலான கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது

இலை கீரைகள்

கேல், கோலார்ட் கீரைகள் போன்றவை உடலில் குறிப்பிடத்தக்க அளவிலான கால்சியம் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

பால் பொருள்கள்

பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை கால்சியம் நிறைந்த உணவுகளாகும். இவை எலும்பு வலுவாக உதவுகிறது

வலுவூட்டப்பட்ட தானியங்கள்

பல்வேறு காலை உணவு தானியங்களில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பை வலுவாக்கலாம்

ப்ரோக்கோலி

பச்சைக் காய்கறியான ப்ரோக்கோலியில் ஆரோக்கியமான வைட்டமின்கள், போதுமான அளவிலான கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது

அத்திப்பழம்

புதிய மற்றும் உலர்ந்த அத்திப்பழங்கள் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் நல்ல அளவிலான கால்சியம் சத்துக்கள் உள்ளது

எள் விதைகள்

இந்த சிறிய விதைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களுடன் கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது