குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புளித்த உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குடல் இயக்கத்தை ஆதரிக்கும் புளித்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்
தயிர்
தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் நிறைந்த உணவாகும். ஸ்மூத்தியாகவோ அல்லது பழங்களோடு சேர்த்தோ தயிரை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
மிசோ
புளித்த சோயபீன்ஸ், அரிசி அல்லது பார்லியில் மிசோ செய்யப்படுகிறது. இது ஜப்பான் நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இந்த புளித்த ரெசிபியானது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
கொம்புச்சா
தற்போது பிரபலமடைந்து வரும் கொம்புச்சா டீ பானத்தில் அதிகளவு புரோபயாடிக், ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆர்கானின் ஆசிட் உள்ளது. இதை சோடா அல்லது வேறு சில குளிர்பானங்களுக்குப் பதிலாக அருந்தலாம்
கெஃபிர்
தயிரைப் போலவே பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களில் ஒன்று கெஃபிர் ஆகும். இது தயிரை விட மெலிதா இருக்கும். கெஃபிர் அதிகளவு புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல வகையான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன
சார்க்ராட்
இது கிழக்கு ஐரோப்பிய உணவாகும். சார்க்ராட் என்பது சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பான, புளித்த சுவையைத் தரக்கூடிய முட்டைக்கோஸ் உணவாகும். இது இறைச்சி உணவுகளுடன் அல்லது சான்ட்விச்களுடன் சேர்த்து சாப்பிடலாம்
கிம்சி மற்றும் ஊறுகாய்
இது ஒரு பாரம்பரிய உணவு வகையைச் சார்ந்ததாகும். இது புளித்த காய்கறிகறிகள் சேர்க்கப்பட்ட உணவாகும். இது கசப்பு, புளிப்பு மற்றும் காரத்தன்மையைக் கொண்ட ஒரு வகை ஊறுகாயாகும். இந்த புளிப்பு உணவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது