இலவங்கப்பட்டை நீர்
இலவங்கப்பட்டை நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்வது வயிற்றில் சேரும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை நன்மைகள்
நிபுணர்கள் கூற்றுப்படி, உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தும் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இலவங்கப்பட்டையில் உள்ளது.
எடை குறைப்பு
இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும். வயிற்றில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இலவங்கப்பட்டை உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை தினமும் தாராளமாக உட்கொள்ளலாம்.
இலவங்கப்பட்டை அஜீரணம், வாயு, மலச்சிக்கல் பிரச்சனையை குறைப்பதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை தண்ணீர் செய்முறை
பாத்திரத்தில் உள்ள தண்ணீரை சூடாக்கவும், இப்போது கொதிக்கும் நீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இது ஆறியதும் அதனுடன் தேன் சேர்த்து பருகவும்.