டிடாக்ஸ் தண்ணீர் அருந்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலை சுத்தப்படுத்த உதவும் ஆரோக்கியமான டிடாக்ஸ் பானங்களைக் காணலாம்
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரில் ஹைட்ரேட்டிங் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் நச்சுத்தன்மையை ஊக்குவிக்கிறது
எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது
வெள்ளரிக்காய் சாறு
இந்தச் சாறு அர்ந்துவது உடலில் திரவம் மற்றும் தாது சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நச்சு நீக்கும் மற்றும் குளிர்ச்சியான பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தவும், நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது
கற்றாழை சாறு
கற்றாழை சாற்றில் சபோனின்கள் மற்றும் அலோயின் போன்றவை உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது
சியாவிதை நீர்
சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது