எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் வலுவான எலும்புக்கு சாப்பிட வேண்டிய அதிக கால்சியம் நிறைந்த உணவுகளைக் காணலாம்
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம் கால்சியம் சத்துக்கள் நிறைந்த இனிப்பு சுவை கொண்ட பழமாகும். இதில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளது
ஆரஞ்சு
ஆரஞ்சு பழமானது வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்றவற்றின் நல்ல மூலமாகும். இது கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை ஆதரிக்கவும் உதவுகிறது
ப்ளாக்பெர்ரி
இதில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
மல்பெர்ரி
மல்பெர்ரிகளில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது
அத்திப்பழம்
இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது
பப்பாளி
இது கால்சியம் சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்த பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எலும்பு வலிமைக்கு உதவும் பழங்களில் பப்பாளியும் ஒன்று
அன்னாசிப்பழம்
இது இனிப்பு சுவை கொண்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இந்தப் பழத்தை உட்கொள்வதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்