அழற்சி எதிர்ப்பு உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கலாம். மேலும் கீல்வாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க முடியும்
இலை கீரைகள்
கீரை வகைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் கே மற்றும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், மத்தி, ட்ரவுட் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஒமேகா-3 உடலில் அழற்சியின் விளைவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது
பெர்ரி
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஃபிளவனாய்டுகள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது
கிரீன் டீ
கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. தினந்தோறும் கிரீன் டீ அருந்துவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
ப்ரோக்கோலி
இதில் சல்போராபேன் என்ற கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள கணிசமான அளவு வைட்டமின் கே சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
குடை மிளகாய்
இதில் ஆற்றல் மிகுந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இதனுடன் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள அனாபிக் மற்றும் ஃபெருலிக் அமிலம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் மற்றும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள அழற்சி விளைவுகளைத் தடுப்பதுடன், மூட்டு வலி மற்றும் குடல் நோய் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது