ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
இரத்த அழுத்தத்தை சீராக்க
மீன் எண்ணெய் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் பங்கு வகிக்கிறது
இதய நோய் அபாயத்தைக் குறைக்க
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நல்ல கொழுப்பை அதிகரித்து பக்கவாதம் மற்றும் இதய நோய் ஏற்பட்ம் அபாயத்தைக் குறைக்கிறது
ஆரோக்கியமான தமனி செயல்பாட்டிற்கு
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுத்து, ஆரோக்கியமான தமனி செயல்பாட்டை ஊக்குவித்து, இதயநோய் அபாயத்தைக் குறைக்கிறது
மூளை வளர்ச்சிக்கு
குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமானதாகும். இதை எடுத்துக் கொள்வது வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் செயல்பாட்டை தொடர்ந்து ஆதரிக்க உதவுகிறது
கண்நோய் அபாயத்தைக் குறைக்க
உணவில் மீன் எண்ணெயைச் சேர்ப்பது மாகுலர் சிதைவு போன்ற கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
எவ்வளவு?
பொதுவாக ஒரு நாளைக்கு 3 கிராம் வரை மீன் எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பிறகு தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
குறிப்பு
கடல் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது இரத்த மெலிந்தவர்கள், உணவில் மீன் எண்ணெயைச் சேர்க்கும் முன் சுகாதார நிபுணர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்