இரவில் நிர்வாணமாக தூங்குவது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
16 Sep 2024, 01:26 IST

நம்மில் பலர் கோடைக்காலத்தில் ஆடையின்றி உறங்குவதையே அதிகம் விரும்புவோம். ஆடையின்றி உறங்குவதால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரவில் ஆடை அணியாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

பதட்டம் குறையும்

ஆடை இல்லாமல் தூங்குவதால் உங்கள் ஒட்டுமொத்த மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கலாம். போதுமான தூக்கமிம்மை உங்கள் மன அழுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. ஆடை இல்லாமல் தூங்குவதால், மூளையில் உடலை ரிலாக்ஸ் வைக்க உதவும் ஹார்மோன்கள் சுரக்கும்.

இதய ஆரோக்கியம்

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு ஆடை அணியாமல் தூங்குவதால் நல்ல தூக்கம் வரும். இது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

கருவுறுதல்

இறுக்கமான உள்ளாடைகளை அணிபவர்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஆடை இல்லாமல் தூங்குவது உங்கள் கருவுறுதலை மேம்படுத்துகிறது.

வளர்சிதை மாற்றம்

ஆடையின்றி உறங்குவதால் ஏற்படும் பாதிப்பு உடலில் தென்படுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த வேலைகளை செய்கிறது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

பிறப்புறுப்பு ஆரோக்கியம்

இரவில் ஆடை இல்லாமல் தூங்குவது பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, யோனி ஈஸ்ட் தொற்று அபாயம் இல்லை.

சிறந்த தூக்கம்

உங்கள் உடலை குளிர்விப்பது உங்களுக்கு வேகமாக தூங்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த தூக்க தரத்தையும் மேம்படுத்துகிறது. எனவே, இரவில் ஆடை இல்லாமல் தூங்கினால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதனால் நீங்கள் மிகவும் நிம்மதியாக உணர முடியும்.

சரும ஆரோக்கியம்

நிர்வாணமாக தூங்குவது உங்களின் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவும் என்பதால், அது உங்கள் சருமத்தையும் மேம்படுத்தும். இது ஆய்வும் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.