தினசரி உணவில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வது உடலில் அதிக கலோரிகளை உண்டாக்கும். இது அதிக எடை, நீரிழிவு மற்றும் இன்னும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் சர்க்கரையை தவிர்ப்பதால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
உடல் எடையிழப்புக்கு
சர்க்கரைகளைக் குறைப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. இது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது
இதய பாதுகாப்புக்கு
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்போது ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இதய நோய் ஏற்படும்
ஆற்றல் அளவை அதிகப்படுத்த
சர்க்கரை உட்கொள்வதைக் காட்டிலும், சர்க்கரையைத் தவிர்ப்பது அல்லது குறைந்த சர்க்கரை உணவுகளைத் தேர்ந்தெடுப்பது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது
மூளை செயல்பாடு
அதிகளவு சர்க்கரை நுகர்வு அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் பலவீனமான மூளை செயல்பாட்டை ஏற்படுத்தலாம்
மனநிலை மாற்றங்கள்
சர்க்கரை உட்கொள்ளல் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது. இது மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்
சரும பிரச்சனைகள்
அதிகளவு சர்க்கரை நுகர்வு முகப்பரு, வீக்கம் மற்றும் முன்கூட்டிய வயதான தாக்கம் போன்ற தோல் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக அமைகிறது